டோனியா..கோஹ்லியா..! இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? நேர்மையாக பதிலளித்த கம்பீர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியை இதுவரை வழிநடத்திய கேப்டன்களில் டோனி தான் சிறந்தவரா என்ற கேள்விக்கு, அரசியல்வாதியாக மாறி உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேர்மையாக பதிலளித்துள்ளார்.

2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை கைப்பற்றிய டோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடியவர் கவுதம் கம்பீர். அவரிடம், இதுவரை இந்திய உருவாக்கி கேட்படன்களிலே டோனி தான் சிறந்தவரா என கேட்க்கப்பட்ட கேள்விக்கு நேர்மையாக பதில் அளித்துள்ளார்.

கம்பீர் கூறியதாவது, ஐசிசி உலகக் கோப்பை டி20, உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளுக்கு இந்தியாவை வழிநடத்தியதால், புள்ளிவிவரங்கள் படி டோனி சிறந்த கேப்டன், ஆனால் மற்ற கேப்டன்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.

கங்குலியின் தலைமையின் கீழ் இந்திய அணி வெளிநாட்டுத் தொடரை வென்றது, கும்ப்ளே கேப்டனாக இருந்த குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார், அதே நேரத்தில் டிராவிட் இந்திய அணியை இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் வெற்றிக்கு வழிநடத்தினார்.

தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ், இந்தியா தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடர் வெற்றிகளையும், அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers