அவர் சிறந்த தேச பக்தர்.. கம்பீரமாக நடைபோடும் டோனியின் வீடியோவை பகிர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஷெல்டன் காட்ரெல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டோனியின் நாட்டுப்பற்று உத்வேகம் தருவதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கிறார். இந்திய அணி செல்லும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட டோனி, காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அனுமதி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, வரும் 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை, விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார். ராணுவத்தில் டோனி பயிற்சி பெறுவதை கவுதம் காம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் ராணுவத்தில் டோனி பயிற்சி பெறுவதை புகழ்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இந்த மனிதர் (டோனி) களத்தில் நின்றால் உத்வேகம்.

இவர் சிறந்த தேச பக்தர். கிரிக்கெட்டுக்கு அப்பால் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். கடந்த சில நாட்களாக வீட்டில் இருப்பதால் இதை பிரதிபலிக்க நேரம் கிடைத்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு டோனி கௌரவ லெப்டினண்டாக பொறுப்பேற்ற வீடியோவையும் பதிவு செய்துள்ளார். அதில் ‘என்னை போலவே நீங்களும் மகிழுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்