16 ஆண்டுகால உலக சாதனை.. மின்னல் வேகத்தில் ஓடி முறியடித்த வீராங்கனை!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவில் சாம்பியன்ஷிப் தடகள ஓட்டப்பந்தய போட்டியில், பந்தய தூரத்தை 52.20 விநாடிகளில் கடந்து தலிலா முகம்மது என்ற வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் லோவாவில் உள்ள டெஸ் மொயினில் சாம்பியன்ஷிப் தடகள ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் இறுதி நாளில், அமெரிக்காவைச் சேர்ந்த தலிலா முகம்மது என்ற வீராங்கனை, 400 மீற்றர் பந்தய தூரத்தை 52.20 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு, 2003ஆம் ஆண்டு ரஷ்யாவின் யூலிபா பெக்கோன்கினா செய்த சாதனையை, 0.14 விநாடிகள் குறைவாக கடந்து தலிலா 16 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

மெக்லாக்லின் இரண்டாவது இடத்தையும் (52.88 விநாடிகள்), ஆஸ்லே ஸ்பென்சர் மூன்றாவது இடத்தையும் (53.11) பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வெற்றி குறித்து பேசி தலிலா முகம்மது ‘அது (வெற்றி) அங்கே தான் இருந்தது என்று எனது பயிற்சியாளர் என்னிடம் கூறினார். நான் அதை நம்பினேன், அதையே தேர்வு செய்தேன்.

நான் அதை மிகவும் சோகமாக விரும்பினேன், அங்கு வெளியே சென்று என்னை நிரூபிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்