சென்னைக்கு திடீரென வந்த டோனி! என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி இராணுவத்துடன் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

டோனி இராணுவத்தில் சேர்ந்து விட்டார் என்றும் காஷ்மீர் மக்களை பாதுகாக்க தரைப்படையில் பணிபுரிய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சென்னையில் திருமணம் குறித்து அவர் பேசிய வீடியோ வெளியானதன் மூலம் டோனி இன்னும் இராணுவத்துடன் இணையவில்லை என தெரியவந்துள்ளது.

அதாவது, அடுத்த இரண்டு மாதங்கள் தான் இராணுவத்தில் பணிபுரிய உள்ளதாக கூறினார்.

வரும் ஜூலை 29 முதல் 16 நாட்கள் காஷ்மீர் தரைப்படையுடன் இணைந்து பணிபுரிவார் என்றும் அறிவித்தது.

அதனால், டோனி ரசிகர்கள் அவர் எல்லையில் பணிபுரியும் காட்சிகளை காண ஆவலாக இருந்தார்கள். ஆனால், ஞாயிறு அன்று டோனி சென்னையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வெளியாகி அவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

அங்கே அவர் என்ன பேசினார் என்பது தான் வேடிக்கை. கல்யாண வாழ்க்கை பற்றி பேசி அசத்தினார்.

அவர் பேசுகையில், கல்யாணம் ஏன் தேவை என்றால், நீங்கள் ஐம்பது வயதை தாண்டும் போது, அது தான் உண்மையான காதலுக்கான நேரம். உங்கள் குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று விடுவார்கள். அப்போது தான் உங்களுக்கான நேரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்திய இராணுவம் ஏற்கனவே அறிவித்தபடி டோனி இன்று இராணுவத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கலாம் என தெரிகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்