ராணுவத்துடன் இணைந்த டோனி.. தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.டோனி ராணுவத்தின் விக்டர் படையினருடன் இணைந்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டோனி, கிரிக்கெட்டிற்கு விடுப்பு எடுத்துவிட்டு ராணுவ பயிற்சியில் இணைய உள்ளதாக அறிவித்தார்.

அதன்படி, இரண்டு மாதங்கள் டோனி ராணுவப்பயிற்சி பெற தலைமை தளபதி பிபின் ராவத் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், காஷ்மீரில் உள்ள பாராமிலிட்டரியின் 106வது பட்டாலியனில் இயங்கும் விக்டர் படையில் டோனி இணைந்துள்ளார்.

எப்போதும் பதற்ற நிலை நீடிக்கும் தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், டோனி ரோந்து மற்றும் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட உள்ளார். சக வீரர்களைப்போல் கண்காணிப்பில் ஈடுபட உள்ள அவர், ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை ராணுவ பயிற்சியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் கௌரவ லெப்டினண்ட் கேனல் பதவியில் உள்ள டோனி, ராணுவத்தின் சிறப்பு ஆபரேஷன்களில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

PTI

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்