சிக்ஸ் மட்டுமா.. டோனி அருமையாக பாட்டும் பாடுவார்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரின் அதிரடி ஹெலிகாப்டர் சிக்ஸ், ஈக்கட்டான சூழலில் அமைதி, அசாதாரண விக்கெட் கீப்பிங் திறமை என சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போது டோனி, ராணுவ உடையில், ராணுவ வீரர்கள் மத்தியில் அருமையான குரலில் பாடல் ஒன்று பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பைக்கு பின் இரண்டு மாதங்கள் ராணுவப்பயிற்சிக்கு சென்றுள்ள டோனி, தெற்கு காஷ்மீரில் உள்ள பாராமிலிட்டரியின் 106வது பட்டாலியனில் இயங்கும் விக்டர் படையில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் டோனி, ராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. தற்போது, ராணுவ வீரர்கள் மத்தியில் ராணுவ உடையில் டோனி 'Main Pal Do Pal Ka Shayar Hun' என்ற பாடலை பாடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆனால், குறித்த வீடியோ 2014 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்காக ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வின் போது டோனி பாடியதாகும். தற்போது, டோனி ராணுவ பயிற்சிக்கு சென்றுள்ளதால் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...