டோனிக்காக மிகவும் விலையுயர்ந்த பரிசை வாங்கியுள்ள மனைவி சாக்‌ஷி... என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனிக்கு அவரது மனைவி சாக்க்ஷி, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக அளிக்க காத்துள்ளார்.

டோனிக்கு எப்போது வாகனங்கள் மீது அலாதி பிரியம் உண்டு. பைக்குகள், கார்கள் என ஏராளமானவற்றை வாங்கி குவித்திருக்கிறார்.

தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வரும் டோனியின் பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் திகதி முடிவடைகிறது.

இந்நிலையில் அவரது மனைவி சாக்‌ஷி டோனிக்காக விலை உயர்ந்த புதிய கார் ஒன்றினை வாங்கி அவரது வீட்டில் நிறுத்தியுள்ளார்.

அந்த காரை புகைப்படம் எடுத்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், உங்களின் புதிய விளையாட்டு பொருளாக இந்த கார் நம் வீடு வந்து சேர்ந்து விட்டது. முதல் நபர் மகி..!! உங்களை பெரிதும் மிஸ் செய்கிறேன்.

இந்த கார் இந்தியாவின் குடிமகன் என்ற அடையாளத்துக்காக காத்திருக்கிறது, ஏன் என்றால் இந்த காரை வைத்திருக்கும் முதல் இந்தியர் நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார்.

இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த கார் கிராண்ட் செரோக்கே வகை கார் ஆகும். டோனியிடம் ஏற்கனவே, பெராரி 599 GTO, ஹம்மர் H2 ஆகிய கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்