காஷ்மீர் இளைஞர்களுக்காக.. டோனியின் புதிய அசத்தல் திட்டம்: கசிந்தது தகவல்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள இளம் திறமையாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அப்பிராந்தியத்தில் கிரிக்கெட் அகாடமியைத் திறக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத இடைவெளி எடுத்து இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற வரும் டோனி, தற்போது காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் 106 டிஏ பட்டாலியன் (பாரா) உடன் சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ கிரிக்கெட் அகாடமி தொடங்கவும், அதில் இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கவும் டோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது, சட்டப்பிரிவு 370 வது ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் அமைதியின்மை நிலவி வருகிறது, மேலும் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் காஷ்மீரில் ஒரு அகாடமியைத் திறப்பது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் முறையாக தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்