24 ஆண்டுகளுக்கு பின் காமன்வெல்த் போட்டியில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

2022ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 போட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஸ் லீக் எனப்படும் பெண்களுக்கான உள்ளூர் 20ஓவர் போட்டி நவீன யுகத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடர் பிரபலமானதையடுத்து, பெண்கள் அணிக்கு உத்வேகம் கொடுக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈ.சி.பி) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், பர்மிங்காம் 2022 காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் டி 20 கிரிக்கெட் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் (சிஜிஎஃப்) இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். 18 விளையாட்டுகளில் 4,500 விளையாட்டு வீரர்கள் போட்டியிட உள்ளனர். எட்டு அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி 8 நாட்களில் நடந்து முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோலாலம்பூரில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில், கிரிக்கெட் விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருந்தது, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா தங்கப்பதக்கத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்