இந்திய அணித்தலைவர் கோஹ்லியிடம் மன்னிப்பு கேட்ட தென் ஆப்பரிக்க வீரர் டேல் ஸ்டெயின், அதன் மூலம் இந்தியாவை அசிங்கப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தென் ஆப்பரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. செப்டம்பர் 15ம் திகதி இந்தியா-தென் ஆப்பரிக்கா மோதும் முதல் டி20 போட்டி நடைபெறும்.
இந்நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென் ஆப்பரிக்காவின் டி20 மற்றும் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மோதும் தென் ஆப்பரிக்கா அணியில், தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம்பெறவில்லை. ஸ்டெயின் சமீபத்தில் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டதால் தனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது போல் ஸ்டெயின் ட்விட் செய்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் புதிய தேர்வாளர்கள் உங்களை பெரிய' விளையாட்டுகளுக்காக சேமித்து வைத்துள்ளனர் என Neil Manthorp என்ற நபர் கருத்து தெரிவித்தார்.
Neil Manthorp ட்விட்டுக்கு பதிலளித்த ஸ்டெயின், விராட் கோஹ்லி மற்றும் பில்லியன் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டார்.சம்பந்தம் இல்லாமல் ஸ்டெயின் ஏன் கோஹ்லியிடம் மன்னிப்பு கேட்டார் என்பது தெரியாமல் பல நெட்டிசன்கள் குழம்பி தவித்தனர்.
Apologies to Virat and a billion people for thinking they not
— Dale Steyn (@DaleSteyn62) August 13, 2019
இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடர் பெரிய விளையாட்டு என்று தென் ஆப்பிரிக்கா தேர்வாளர்கள் நினைக்காததால், ஸ்டெயின் கோஹ்லியிடம் மன்னிப்பு கேட்டதாக ட்விட் பரிமாற்றம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்