ராகுல் டிராவிட் விடயத்தில் இரட்டை ஆதாய பிரச்சனை இல்லை: இந்திய கிரிக்கெட் வாரியம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

டிராவிட் நியமனம் விடயத்தில் இரட்டை ஆதாயம் பிரச்சனை எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அத்துடன், இந்தியா சிமெண்ட்ஸ் குழுவின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றி வருவது, இரட்டை ஆதாயம் தேடுவதாக உள்ளதாக சர்ச்சை கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விளக்கம் கேட்டு டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதன் பின்னர், ராகுல் டிராவிட் நன்னடத்தை அதிகாரிக்கு பதில் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு கூட்டத்தில், உறுப்பினரான ரவி தோஜ்டே பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

‘டிராவிட் நியமனம் விடயத்தில் இரட்டை ஆதாயம் பிரச்சனை எதுவும் இல்லை. அவரது நியமனத்துக்கு நிர்வாக குழு அனுமதி அளித்து விட்டது. நன்னடத்தை அதிகாரி இரட்டை ஆதாய பிரச்சனை இருப்பதாக கருதினால், அதற்கு நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு, புதிய பயிற்சியாளரை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தெரிவு செய்யும்.

கிரிக்கெட் ஆலோசனை குழு தன்னிச்சையான அமைப்பு. அவர்கள் வழக்கமான விதிமுறையின்படி பயிற்சியாளரை தெரிவு செய்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers