மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியத்தை உடனே நாடு திரும்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி, டி20 தொடரை அடுத்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த சில உயர் அதிகாரிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக சுப்பிரமணியம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்காரணத்திற்காக சுப்பிரமணியத்தை உடனே நாடு திரும்ப உத்தரவிட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய உடன் பிசிசிஐ முன் ஆஜராகி இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடனான தவறான நடத்தைக்கு காரணம் குறித்த சுப்பிரமணியம் விளக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர் பாதுகாப்பை' ஊக்குவிப்பதற்காக வீரர்களின் வீடியோ எடுக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையுடன் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் அவரை அணுகியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் சுப்பிரமணியம் மாரியாதை குறைவாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்