சிவப்பு ஜெர்ஸி எண், தொப்பியுடன் ஆடும் அவுஸ்திரேலியா -இங்கிலாந்து: பின்னணியில் சோகக் கதை

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியினர் இன்றைய டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. துடுப்பெடுத்து ஆடிவரும் இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ஓட்டங்கள்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் துடுப்பாட்ட வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் அணிந்துள்ள ஜெர்ஸியில், அவர்களின் எண்கள் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அவர்கள் சிவப்பு தொப்பி அணிந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

ரூத் ஸ்ட்ராஸ் என்ற அறக்கட்டளை சார்பில் நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுக்காக இரு அணி வீரர்கள் இவ்வாறு சிவப்பு நிறத்தை ஏற்று விளையாடுகின்றனர்.

ஆனால் இதற்கு பின்னால் ஒரு சோகக் கதை இருக்கிறது. ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை என்பது இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸால் உருவாக்கப்பட்டது.

அவரது மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் இறந்துவிட்டார்.

அதன்பின்னர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நுரையீரல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்