தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலைக்கு காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி சந்திரசேகர் தற்கொலைக்கு கடன் பிரச்சனை தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி பெருமை தேடி தந்தவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து டோனியை சென்னை அணிக்காக தேர்ந்தெடுத்தவர் என ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரரான வி.பி.சந்திரசேகர் நேற்று தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சந்திரசேகர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, டிஎன்பிஎல் தொடரில் காஞ்சி வீரன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளராக இருந்த அவருக்கு அந்த போட்டிகளால் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட கடன் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் காவல் உதவி ஆணையர் நெல்சன் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்