களத்திற்கு திரும்பும் டோனி? புகைப்படம் வெளியீடு..!

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ் டோனி பெற்று வந்த இராணுவ பயிற்சி இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்திய ராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமெண்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் டோனி 15 நாட்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் ஜம்மு காஷ்மீரில் விக்டர் படையுடன் இணைந்து ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை தோனி மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து, சுதந்திர தினத்தை இந்திய ராணுவத்தினருடன் லடாக் மற்றும் சியாச்சென் பகுதிகளில் டோனி கொண்டாடினார்.

முன்னதாக இராணுவ வீரர்களுடன் விளையாடுவது போன்ற காட்சிகள் எல்லாம் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில், அவரது 15 நாள் ராணுவ பயிற்சி முடிவடைந்துள்ளது. அவர் டெல்லி விமான நிலையம் வந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவரது அடுத்தக்கட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், அடுத்து நடைபெற இருக்கும் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட டோனி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்