இந்திய பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலி துபாயில் இந்திய பெண்ணை திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, அணிக்காக ஒன்பது டெஸ்ட் மற்றும் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2017 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் முக்கிய நபராக செயல்பட்டவர்.

இருப்பினும் அவருடைய பந்துவீச்சில் தொடர்ச்சியான எழுச்சி இல்லாததால் நடந்து முடிந்த உலகக்கோப்பை அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த 26 வயதான ஷாமியா என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார்.

அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் துவங்கி பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் துபாயில் விமரிசையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers