சிஎஸ்கே அணியில் நிச்சயமாக தொடர்ந்து விளையாடுவேன்: ஓய்வு முடிவை மாற்றிய மூத்த வீரர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறாததால் ஏமாற்றம் அடைந்த ராயுடு, யூலை மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இப்போது மீண்டும் ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே-க்காக விளையாட விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ராயுடு கூறியதாவது, நான் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவேன், மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் வருவேன். இப்போது உடற்தகுதிக்கு திரும்புவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறேன்.

ஓய்வை அறிவித்தது உணர்ச்சிபூர்வமான முடிவு என்று நான் கூறமாட்டேன், ஏனெனில், கடந்த நான்கு ஆண்டுகளில் உலகக் கோப்பைக்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.நீங்கள் ஏமாற்றமடைந்த நிலையில் இருக்கிறீர்கள், இது ஓய்வு பெற வேண்டிய நேரம் என்று உணர்ந்தேன். நான் எடுத்த முடிவு நிராகரிப்பு அல்லது வேறு எதற்காகவோ அல்ல.

நீங்கள் எதையாவது நோக்கிச் செயல்படுகிறீர்கள், அதை அடைய முடியாத போது, அதை கடந்த செல்ல வேண்டிய நேரம் இது என்று நீங்கள் உணர்கிறீர்கள் என்று ராயுடு ஓய்வுபெற்ற முடிவைப் பற்றி கூறினார்.

தொடர்ந்து விளையாடுவது பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது, பின்னர் சில கிரிக்கெட்டை விளையாடலாம் என்று முடிவு செய்தேன்.

இந்திய டி20 அணியில் விளையாடுவது குறித்து இதுவரை நான் யோசிக்கவில்லை. நான் அதை படிப்படியாக செய்ய வேண்டும். சென்னை எப்போதும் உங்களை வரவேற்கும் இடமாகும். டிஎன்சிஏ லீக் தொடர் மிகவும் சவாலானது மற்றும் எனது திறனை மீண்டும் பெற எனக்கு ஒரு நல்ல தளமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்