பிரித்தானியா கிரிக்கெட் அணியில் இணைந்த பிரபல தமிழக வீரர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான முரளி விஜய் ஞாயிற்றுக்கிழமை இங்கிலீஷ் கவுண்டி கிரிக்கெட் அணியான Somerset-ல் இணைந்துள்ளார் என்று அக்கிளப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடரின் இறுதி மூன்று Specsavers கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் முரளி விஜய் எங்கள் வெளிநாட்டு வீரராக கிளப்பில் இணைவார் என்று அறிவிப்புக்கு Somerset கவுண்டி கிரிக்கெட் கிளப் மகிழ்ச்சி அடைவதாக தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானால் திரும்ப அழைக்கப்பட்ட அசார் அலிக்கு பதிலாக முரளி விஜய் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதான விஜய், 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4000 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 167 ஓட்டங்கள் அடித்துள்ளார். கடந்த பருவத்தில் Essex அணிக்காக மூன்று கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று 320 ஓட்டங்களுக்கு மேல் அடித்தார்.

கவுண்டி சாம்பியன்ஷிப்பிற்கு Somerset-க்கு உதவ முயற்சிக்கும் சவாலைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். Somerset ஒரு சிறந்த நற்பெயரைக் கொண்டுள்ளது, மேலும் அவர்கள் எதை அடைய முயற்சிக்கிறார்களோ அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று விஜய் கூறினார்.

கடந்த ஆண்டு Essex அணிக்காக சாம்பியன்ஷிப்பில் விளையாடிய அவருக்கு தொடரின் நிலைமைகள் பற்றிய அனுபவம் உள்ளது, மேலும் அசாருக்கு பதிலாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று Somerset சிசிசி கிரிக்கெட் இயக்குனர் ஆண்டி ஹர்ரி கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்