நொடியில் திகைத்த ரூட்.. இங்கிலாந்து ரசிகர்களை வாயடைத்து உறைய வைத்த வார்னர்: அசத்தல் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து நடைபெற்று ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் வார்னர் பிடித்த கேட்ச் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து-அவுஸ்திலேியா இடையேயான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஸ்டோக்ஸின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற வெற்றி கணக்கில் சமனடைந்தது. இதனிடையே, லீட்ஸ் டெஸ்டில் அவுஸ்திரேலிய வார்னர் பிடித்த கேட்ச் வைரலாகியுள்ளது.

359 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. 159 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்த நிலையில் , அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் lyon பந்து வீச, இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் துடுப்பாடினார்.

பந்து ரூட்டின் துடுப்பில் பட்டு, விக்கெட் கீப்பரின் தாண்டிச் செல்ல, ஸ்லீப்பில் இருந்த வார்னர், யாரும் எதிர்பாராத விதத்தில் பறந்த பந்தை பிடித்து அசத்தினார். இதை கண்ட ரூட் திகைத்து போக, மைதானத்தில் இருந்து இங்கிாலந்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

வார்னரின் அசத்தல் கேட்ச்சை பலரும் பாராட்டி வருகின்றனர். பீல்டிங் ஜம்பவான் ஜான்டி ரோட்சை பார்த்தது போல் இருந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறித்த கேட்ச் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்