உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோல்வி.. அணித்தலைவரை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்: கசிந்த வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

2019 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததற்காக பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமதுவை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அசிங்கப்படுத்தியுள்ளார்.

2019 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு முன்னதாக, நாணய சுழற்சியில் வென்ற பிறகு முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்திருந்தார், ஆனால், சர்பராஸ் பிரதமரன் ஆலோசனையை பின்பற்றவில்லை.

அப்போட்டியில் டிஎல்எஸ் முறைப்படி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிப்பெற்றது. இந்தியாவிடம் தோல்வியடைந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பாரஸை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிய ஒன்றில் உறையாடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததை மேற்கொளிட்டு பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸை அசிங்கப்படுத்தியுள்ளார்.

இம்ரான் கான் கூறியதாவது, தோல்வி பயம் உங்களின் உத்தி, எதிர்மறை மற்றும் தற்காப்பு எண்ணங்களை முழுமையாக மாற்றி அமைத்துவிடும்.

சமீபத்தில் உலகக் கோப்பையில் நமது அணித்தலைவர் செய்தது போல், நாணய சுழற்சியில் வென்ற பிறகு, நீங்கள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருக்க வேண்டும், மாறாக எதிர் அணி துடுப்பாட வாய்ப்பு அளித்திருக்ககூடாது. இது மனநிலையைப் பற்றியது என விமர்சித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்