அன்று விபத்தில் துண்டான கால்.. இன்று உலகையே தன் வசப்படுத்திய பெண்: சிலிர்க்க வைத்த மானசி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

BWF பேட்மிண்டன் உலக சாம்பியனில் தங்கம் வென்ற முதல் இந்தியரான பி.வி.சிந்துவுடன், பாரா பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷியும் பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மானசி ஜோஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இறுதிப்போட்டியில் 30 வயதான மானசி, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை பருல் பர்மரை எதிர்கொண்டார். இதில், 21-12, 21-7 என்ற புள்ளிகளுடன் தோற்கடித்து தனது முதல் தங்கத்தை வென்றார்.

2011 ஆம் ஆண்டு, மும்பையில் சாலை விபத்தில் சிக்கிய மானசி அவரது இடது காலை இழந்தார். மேலும், அவருக்கு கைகள் உடைந்து பல காயங்கள் ஏற்பட்டது நினைவுக் கூரதக்கது.

அத்தகைய கடினமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள மானசி, இன்று பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்று உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து, அனைவருக்கு ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளார்.

வெற்றிக்கு பின் பேட்டியளித்த மானசி, நான் மிகவும் கடினமாக பயிற்சி பெற்றேன், ஒரு நாளைக்கு மூன்று முறை பயிற்சி செய்தேன். எனது உடற்தகுதி மீது கவனம் செலுத்தினேன். எனவே கொஞ்சம் எடை இழந்து அதிக தசையைப் பெற்றேன். ஜிம்மில் அதிக நேரம் செலவிட்டேன், வாரத்தில் ஆறு முறை பயற்சி செய்தேன்.

இதற்காக பயிற்சியாளர் கோபி -சார்க்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனது வாழ்க்கை மாறும் என்று நம்புகிறேன், சிறந்த அங்கீகாரம் மற்றும் ஆதரவின் அடிப்படையில் இந்த பொன்னான தருணத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தபின், குறிப்பாக பாராலிம்பிக்ஸ் மற்றும் அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவைத் துரத்த உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களைப் பெறுவது போன்றது இது என மானசி உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் இந்திய பாரா அணி 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers