உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் முதல் முறையாக தங்கம் வென்று சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரேசில் நாட்டில் உலக கோப்பைக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூத்தோர்களுக்கு 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் பங்கேற்றார்.
பரபரப்பாக நடந்த போட்டியின் முடிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவின் சியோனட் மிண்டோஸ் 250.6 புள்ளிகள் எடுத்தார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் மூத்தோர்களுக்கு 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் முதல் முறையாக இளவேனில் தங்கம் வென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே ஜேர்மனியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார்.
இந்நிலையில், தங்கம் வென்று சாதித்த இளவேனில் வளரிவானுக்கும், நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்