இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 2020ம் ஆண்டு யூலை மாதத்தில் 100 பந்துகள் கொண்ட The Hundred என்று வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது

The Hundred தொடரில் Southampton நகரினை தளமாகக் கொண்ட ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் Southampton தளமாகக் கொண்ட மகளிர் அணியின் பயிற்சியாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சரோலட் எட்வார்ட்ஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இது குறித்து ஜெயவர்தன கூறியதாவது, The Hundred என்பது ஒரு புதுமையான மற்றும் அற்புதமான புதிய போட்டியாகும், இது Southampton தளமாகக் கொண்ட அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது ஒரு பெரிய பாக்கியம். நான் Southampton-ல் சர்வதேச மற்றும் மாவட்ட கிரிக்கெட்டில் விளையாடியுள்ளேன், இது ஒரு சிறந்த இடம், நான் திரும்பிச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஷேன் பாண்ட் மற்றும் Sussex, Hampshire-யின் சில திறமையான பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

The Hundred தொடரில் விளையாட உலகின் சிறந்த வீரர்களுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடம். போட்டியின் கட்டமைப்பு நன்றாக உள்ளது, அதாவது பெரும்பாலான வீரர்கள் இதில் இடம்பெற முயற்சிப்பார்கள், ஏனெனில் இது அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு போட்டி என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்