வெளிநாட்டுக்கு வேலை செய்ய சென்ற நிலையில் திடீர் ஹீரோவான தமிழர்... என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழர் ஒருவர் 40 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்ததால் 12 வருட சர்வதேச டி20 சாதனை ஒன்றை முறியடித்துள்ளது ரோமானியா கிரிக்கெட் அணி.

தமிழகத்தின் சிவகாசியை பூர்வீகமாக கொண்டவர் சிவகுமார் பெரியாழ்வார்.

கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட இவருக்கு ரோமானியாவில் வேலை கிடைத்தது.

அங்கு சென்ற பின் அங்கே கிரிக்கெட் கிளப் இருப்பது தெரிந்து வார விடுமுறை நாட்களில் கிரிக்கெட் ஆடி வந்துள்ளார்.

அந்த நாட்டின் டி20 தொடரில் சிறப்பாக ஆடி தேசிய அணியிலும் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து ஆடி வந்த அவர் துருக்கி அணிக்கு எதிராக கலக்கி இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ரோமானியா கோப்பை தொடரில் துருக்கி அணிக்கு எதிராக முதலில் துடுப்பாட்டம் செய்தது ரோமானியா.

முதல் 15 ஓவர்களில் நல்ல ஓட்டங்களை எட்டியது ரோமானியா. அதுவரை சாதாரணமாக விளையாடிய சிவக்குமார் பின்னர் அதிரடிக்கு மாறி வெளுத்து வாங்கினார்.

இதையடுத்து 40 பந்துகளில் 105 ஓட்டங்களை குவிக்க ரோமானியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் எடுத்தது.

227 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய துருக்கி வெறும் 53 ஓட்டங்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது.

இதை தொடர்ந்து 173 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ரோமானியா. இது சர்வதேச டி20யில் பெரிய சாதனை வெற்றியாகும்.

கடந்த 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் கென்யா அணியை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில் ரோமானியா அணி அந்த சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்