இலங்கை மலைப்பாதையில் திடீரென நின்ற பேருந்து.. பீதியடைந்த நியூசிலாந்து வீரர்கள்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து, மலைப்பாதையில் திடீரென breakdown ஆனதால் வீரர்கள் பீதியில் உறைந்துபோயினர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தொடங்க உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து வீரர்கள் தங்கள் ஹொட்டலில் இருந்து கண்டிக்கு பேருந்து மூலம் பயணித்தனர். மலைப்பாதையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக breakdown ஆனது.

திடீரென பேருந்து நின்றதால் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் பீதியில் உறைந்தனர். அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கை அணி நிர்வாகம், ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களை அனுப்பி வைத்தது. அதனைத் தொடர்ந்து, அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஹொட்டல் அறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விடயத்தை வீடியோவாக எடுத்த நியூசிலாந்து அணியின் மேலாளர், வீரர்களின் மனநிலை அப்போது எப்படி இருந்தது என்று கூறி தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, அங்கிருந்த வங்கதேச வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்போது முதலே நியூசிலாந்து வீரர்கள் ஒருவித அச்சத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்