என் வாழ்க்கையை மாற்றினாய்! மனைவி, குழந்தையுடன் இருக்கும் நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் தனது அழகான குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 180 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ருசல் அர்னால்ட்.

மொத்தமாக 5771 ஓட்டங்களையும் அவர் எடுத்துள்ளார்.

இந்நிலையில் அர்னால்ட் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எல்லா தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள், என் மகன் ஆகாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீ என் வாழ்க்கையை மாற்றினாய், நீ எனக்கு கிடைத்தது கடவுள் கொடுத்த பரிசாக எண்ணுகிறேன் என கூறி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்