என்னுடைய குழந்தைக்கு அப்பாவாக இருக்க முடியுமா? பிரபல நடிகையின் கேள்விக்கு பதிலளித்த கிரிக்கெட் வீரர்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஷேகர் ஷின்வாரி நியூசிலாந்து கிரிக்கெட் வீரரிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது இருக்கும் உலகில் கிரிக்கெட் வீரர்களை நடிகைகள் காதல் செய்வது வழக்கமாக மாறிவிட்டது. இந்திய வீரர் பும்ராவை, நடிகை அனுபமா காதலிப்பதாக செய்தி வெளியானது.

ஆனால் இதைப் பற்றி பும்ரா இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை ஷேகர் ஷின்வாரி, நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமிடம், நீங்கள் என்னுடைய வருஙகால குழந்தைக்கு தந்தையாக இருக்க முடியுமா என்று வித்தியாசமாக காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதனுடன் இரண்டு எமோஜிக்களை சேர்த்திருந்தார்,

இதைக் கண்ட ஜிம்மி, நீங்கள் அந்த எமோஜிக்களை பயன்படுத்தியிருக்கவே தேவையில்லை என்று பதிலளித்தார். தற்போது இருவரின் இந்த டுவிட்டர் உரையாடல் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்