அந்தரத்தில் சுழன்று விழுந்த கார்..! அதிசயமாக உயிர் பிழைத்த வீரர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இத்தாலியில் நடைபெற்ற பார்முலா3 கார் பந்தயத்தில், பயங்கர விபத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் Alex Peroni அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பார்முலா3 கார் பந்தய போட்டி இத்தாலியின் Monza நகரில் நடந்தது. இதில் அவுஸ்திரேலிய வீரர் Alex Peroni கலந்துகொண்டார்.

மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த அவரது கார், வளைவு ஒன்றில் இருந்த தடையின் மீது மோதியதால் மேலெழும்பி அந்தரத்தில் சுழன்று, பின் கிழே விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், Alex Peroni காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே, பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸில் நடந்த பார்முலா2 பந்தயத்தில், பிரான்ஸ் வீரர் Anthoine Hubert விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போட்டி அமைப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பார்முலா1 இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸுக்கு மூன்றாவது பயிற்சிக்கான தாமதத்தை அறிவித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தியை தடையை(kerb) ஆய்வு செய்து அகற்றினர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers