பாரிஸில் இரகசிய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர்!

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

ஜேர்மனியின் கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர் நீண்ட ஆறு ஆண்டுகள் கோமாவுக்கு பிறகு முதன் முறையாக பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் ரகசிய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு முறை கார் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனி நாட்டின் மைக்கேல் ஷூமேக்கர்,

சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகி, கடந்த ஆறு ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திங்களன்று இரவு திடீரென்று தென்மேற்கு பாரிஸில் அமைந்துள்ள Pompidou மருத்துவமனையில் ரகசிய சிக்கிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அவருக்கு பிரஞ்சு மருத்துவர் Philippe Menasche தலைமையில் ஸ்டெம் செல் சிகிச்சை முன்னெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இருதய கோளாறால் மரணத்தின் தருவாயில் இருந்த நபருக்கு 2014 ஆம் ஆண்டு ஸ்டெம் செல் சிகிச்சையால் பிழைக்க வைத்தவர் இந்த 69 வயதான மருத்துவர் Philippe Menasche.

உள்ளூர் நேரப்படி திங்களன்று மாலை 3.40 மணியளவில் Pompidou மருத்துவமனையில் மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது உள்ளூர் ஊடகம் ஒன்று.

நீல வண்ண போர்வையால் மூடப்பட்டு, ஷூமேக்கரை மருத்துவமனைக்குள் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.

ஷூமேக்கருடன் சுமார் 10 பாதுகாப்பு அதிகாரிகளும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக ஷூமேக்கருக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பில் எந்த தகவலையும் வெளியிடமாட்டாது என மருத்துவர் Menasche தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் பாரிஸில் உள்ள இதே மருத்துவமனையில் ஷூமேக்கர் இருமுறை சிகிச்சை எடுத்துள்ளார் எனவும்,

ஹெலிகொப்டர் மூலம் சுவிட்சர்லாந்தில் இருந்து அவர் பாரிஸில் கொண்டு செல்லப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers