மகளுக்கு 18வது பிறந்தநாள் வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறிய இலங்கை வீரர்! வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சமரவீரா 5462 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேலும் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 862 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

சமரவீராவுக்கு இரந்தத்தி என்ற மனைவியும் ஒசுனி மற்றும் சித்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஓசினுக்கு இன்று 18வது பிறந்தநாள் ஆகும்.

இதையடுத்து டுவிட்டரில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமரவீரா அவருக்கு 18வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்துக்கு அதிக லைக்குகள் கிடைத்து வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்