டோனி ஓய்வு பெறப்போகிறாரா? கொந்தளிக்கும் மனைவி சாக்‌ஷி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி ஓய்வு தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ‘இது வெறும் வதந்தி’ என டோனியின் மனைவி சாக்‌ஷி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார்.

அதில், நட்சத்திர வீரர் டோனியுடன் தான் வெற்றிக் களிப்பில் இருப்பது போன்ற படத்தையும் பதிவிட்டார். மேலும், ‘என்னால் மறக்க முடியாத ஒரு போட்டி. சிறப்பான இரவு. உடற்தகுதி தேர்வைப் போல் இந்த மனிதர் (டோனி) என்னை ஓட வைத்தார்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, டோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் கோஹ்லியின் பதிவு இருப்பதாக ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.

அதன் விளைவாக, ரசிகர்கள் பலர் தற்போது ஓய்வு அறிவிப்பை டோனி வெளியிட வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று இரவு டோனி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது.

உடனே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஓய்வு குறித்து டோனி எந்தவொரு தகவலையும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டோனியின் மனைவி சாக்‌ஷி அவர் ஓய்வு பெற மாட்டார் என திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இது வெறும் வதந்தி’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்