ஸ்மித்தை விழுந்தடித்து ஓட விட்ட பேர்ஸ்டோ: கடுப்பான அவுஸ்திரேலியர்கள்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ, ஸ்மித்தை போலியாக ரன் அவுட் செய்வது போல் ஏமாற்றி கீழே விழ வைத்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக ஆட்டம் காட்டி வரும் ஸ்மித், 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்சில் 80 ஓட்டங்களுக்கு வெளியேறினார். இந்த தொடரில் அவர் எடுத்து குறைந்தபட்ச ஓட்டங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

5 வது டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்டத்தின் போது ஸ்டீவ் ஸ்மித் ஓட்டங்கள் எடுக்க துடுப்பாடும் முனைக்கு திரும்பும் போது, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ கையில் பந்தே இல்லாமல் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடிப்பது போல் போலியாக நடிக்க, ஸ்மித் அந்தரத்தில் பறந்து கோட்டிற்குள் விழுந்தார்.

பின்னர், எழுந்து நின்ற பார்த்த போது பந்து, பந்து வீச்சாளரை நோக்கி வீசப்பட்டது என ஸ்மித்திற்கு தெரிய வருகிறது. பேர்ஸ்டோவின் செயலை சிலர் வேடிக்கையாக பார்த்தாலும், ஸ்மித்திற்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் அவ்வாறு செய்ததாக அவுஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், பேர்ஸ்டோவின் செயலால் கடுப்பான அவுஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் Jason Gillespie, இதற்கு விளையாட்டின் விதிப்படி தண்டனையாக 5 ஓட்டங்கள் வழங்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்