தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக ஒப்புகொண்ட பிரபல வீரர்! கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ரக்பி விளையாட்டில் முன்னணி வீரராக திகழும் கேரத் தாமஸ் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக ஒப்பு கொண்டுள்ளார்.

ரக்பி விளையாட்டின் மிகப்பெரிய ஆளுமையாகவும், ஜாம்பவானாகவும் கருதப்படுபவர் கேரத் தாமஸ்.

வேல்ஸ் அணியின் தலைவராக இருந்த அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாகக் கூறும் அவர், பல ஆண்டுகளாக தான் இருட்டான மனதுடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னால் இந்த ரகசிய வாழ்க்கையை வாழ முடியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ள கேரத், மனஅழுத்தத்துடன் இருந்ததால் தற்கொலைக்கு கூட முயன்றதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த மனநிலையில் இருந்து மீண்டு வந்த அவரின் சிறப்பு ஆவணப்படம் வரும் 18ம் திகதி பிபிசி 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்