எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் ஆன்ரே ரஸல், தன்னுடைய மனைவி கர்ப்பம் அடைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆன்ரே ரஸல், சில சொந்த காரணங்களால் இந்திய அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு 3-0 என்கிற கணக்கில் பரிதாபமாக தொடரை இழந்தது.

இந்த நிலையில் ஆன்ரே ரஸல் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "இது என்னுடைய வாழ்க்கையில் மற்றொரு ஆசீர்வாதம். அது ஒரு பெண்ணாகவோ அல்லது பையனாகவோ இருந்தாலும் பரவாயில்லை. ஒரு ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்றே அனைவரும் கடவுளிடம் கேட்கிறார்கள் என பதிவிட்டிருந்தார்.

மேலும், தன்னுடைய மனைவி வீசும் பந்தை அவர் அடித்தவுடன் அனைவரும் ஆரவாரம் செய்வதும் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்