வெளியே தள்ளப்படுவதற்கு முன்... நீங்களே போயிடுங்க டோனி: முன்னாள் அணித்தலைவர் வலியுறுத்தல்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய நட்சத்திர வீரர் டோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் கடைசியாக விளையாடிய டோனி, அதை தொடர்ந்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பரிக்கா உடனான தொடரில் விளையாடவில்லை. இது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் டோனி ஓய்வு குறித்த வதந்திகள் தீயாக பரவி வருகிறது. ஆனால், இன்று வரை டோனி தரப்பில் ஓய்வு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

பலர் டோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்திய முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கரும் கூறியுள்ளார். டோனியின் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இந்திய கிரிக்கெட்டுடன் தனது எதிர்காலம் என்ன என்பதை அவர் மட்டுமே தெளிவுபடுத்த முடியும்.

ஆனால், இப்போது அவருக்கு 38 வயதாகிறது, அதனால், டோனி இல்லாமல் இந்தியா அணி எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அடுத்த டி-20 உலகக் கோப்பை வரும்போது அவருக்கு 39 வயது இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான டோனியின் செயற்பாட்டை மேலும் கருத்தில் கொள்ளாமல், இரண்டு முறை உலகக் கோப்பை வென்றவர் என்ற கண்ணியத்துடன் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற வேண்டிய நேரம் இது.

அவர் மீது இருக்கும் மதிப்பு எப்போதுமே சிறப்பாகவே இருக்கும். அவர் அடித்த ஓட்டங்கள் அல்லது ஸ்டம்பிங் மட்டுமல்ல. அவர் களத்தில் ஒட்டுமொத்தமாக இருப்பது அணித்தலைவருக்கு நிம்மதியாக இருக்கும், ஏனெனில் அணித்தலைவர் தான் அதான் பலனைப் பெறுவார். எனவே அது அணிக்கு ஒரு கூடுதலான பெரிய பலம்.

ஆனால், டோனி கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன் என்று கவாஸ்கர் கூறினார்.

எல்லோருக்கும் அடுத்த கட்ட வாழ்க்கை இருக்கிறது, பலர் நம்புவதை போல நானும் டோனியை மிகுந்த மரியாதையுடன் நம்புகிறேன், மில்லியன் கணக்கான மற்றவர்களைப் போல நானும் ஒரு ரசிகன். அவர் அணியில் இருந்து வெளியே தள்ளப்படாமல், அவராகவே ஓய்வு பெற வேண்டும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்