பாகிஸ்தான் வராததற்கு இது தான் காரணம்... தன்னிடம் இலங்கை வீரர்கள் சொன்ன ரகசியத்தை வெளியிட்ட அப்ரிடி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்ததற்கான காரணத்தை பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் சாகித் அப்ரிடி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அப்ரிடி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல் அணிகளிடமிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. சமீபத்தில் நான் இலங்கை வீரர்களுடன் பேசிய போது அவர்கள் பாகிஸ்தானுக்கு வந்து பிஎஸ்எல் தொடரில் விளையாடுவதாக கூறினார்கள்.

அவர்களுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், ஆனால், பாகிஸ்தானுக்கு சென்றால் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் அளிக்கமாட்டோம் என எச்சரிக்கை வந்ததாக ஐபிஎல் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கிறது. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது எங்கள் வீரர்கள் ஓய்வெடுத்ததே இல்லை. இலங்கை வாரியம் தங்கள் வீரர்களை பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பிராந்தியத்திற்கு வரும் இலங்கை வீரர்கள் என்றும் பாகிஸ்தான் வரலாற்றில் நினைவில் இருப்பார்கள் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்