இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் ஓரங்கட்டப்பட்டால்... அவருக்கு பதில் இவர் தான் சரியான வீரர்: கவாஸ்கர் தடாலடி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

ரிஷப் பந்த்தை விட சிறந்த வீரரை இந்தியா தெரிவு செய்ய வேண்டும் என்றால், அது கேரளாவின் சஞ்சு சாம்சன் தான் என்று நம்புவதாக இந்திய முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் டோனி இடத்தை பிடித்துள்ள பந்த், சமீபத்திய போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தின் மூலம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

பந்த் குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், பந்த அவரின் தவறுகளை பரிசீலனை செய்து வருகிறார். ஆனால், நான்காவது இடத்தை பூர்த்தி செய்ய அவர் தடுமாறி வருகிறார்.

பிப்ரவரி மாதம் முதல் அணிக்காக 8 முறை நான்காவது இடத்தில் களமிறங்கிய பந்த், அதிகபட்சமாக 65 ஓட்டங்கள் ஒரு முறை அடித்தார். எனினும், மீதமுள்ள போட்டிகளில் மொத்தமாக அவர் அடித்த ஓட்டங்கள் 38, அதில் ஐந்த முறை ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறியுள்ளார்.

ஒருவேளை ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம். சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர், துடுப்பாட்டகாரர்.

2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியை இளைஞர்கள்தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்