யாரும் அறிந்திடாத தவானின் மறுபக்கம்.. வெளிபடுத்திவிட்டார் ரோகித்: வேடிக்கையான வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தூக்கத்தில் பேசும் மிகவும் வேடிக்கையான வீடியோ ஒன்றை ரோகித் சர்மா வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி பல போட்டிகளில் கலக்கிய தவான்-ரோகித் ஜோடி, களத்தில் மட்டுமின்றி நகைச்சுவை நிறைந்த சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தவான் தூக்கத்தில் பேசும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பறக்கும் விமானத்தில் ரோகித்திற்கு அருகே அமர்ந்திருக்கும் தவான் தூங்கிக்கொண்டிருக்கிறார்.

தூங்கும்போது தவான் சில வார்த்தைகளை முணுமுணுப்பதை வேடிக்கையாக பதிவு செய்த ரோகித், இல்லை..இல்லை, அவர் என்னுடன் பேசவில்லை! கற்பனை நண்பர் இருக்கும் அளவிற்கு அவருக்கு மிகவும் வயதாகிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

இதுவரை ஒரு சிலர் மட்டுமே அறிந்திருக்ககூடிய தவானின் இந்த பழக்கத்தை ரோகித் பொதுவெளியில் வீடியோவாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்