என் அழகான மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வெளியிட்ட புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சமரவீரா 5462 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேலும் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 862 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சமரவீராவுக்கு இரந்தத்தி என்ற மனைவியும் ஒசுனி மற்றும் சித்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் இரந்தத்திக்கு நேற்று 40வது பிறந்தநாள் ஆகும்.

இதையடுத்து சமரவீரா தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய அழகான மனைவிக்கு 40வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers