2017 ஐபிஎல்-க்குப் பிறகு டோனி தன்னிடம் அளித்த வாக்குறுதி..தீபக் சாஹர் ஓபன் டாக்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

2017 ஐபிஎல் தொடருக்கு பிறகு டோனி தன்னிடம் அளித்த வாக்குறுதியை இந்திய வீரர் தீபக் சாஹர் வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய நாள் முதல் சிறப்பாக விளையாடி வரும் இந்திய டி-20 அணியின் நட்சத்திர வீரராக திகழும் தீபக் சாஹர், சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான விளையாடும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சாஹர் கூறியதாவது, 2016 ஆம் ஆண்டு பயிற்சி ஆட்டத்தில் இரண்டு அரைசதம் விளாசியதால், புனே அணிக்காக ஸ்டீபன் பிளெமிங் தன்னை தெரிவு செய்ததாக கூறினார்.

நான் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவேன் என அப்போதைய புனே அணித்தலைவர் டோனி கூறினார். ஆனால், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் 2016-ல் விளையாட முடியாமல் போனது.

அடுத்து ஆண்டு புனே அணியின் தலைவராக ஸ்மித் பொறுப்பேற்றார், அந்த ஆண்டு சில போட்டிகளில் மட்டுமே நான் விளையாடினேன்.

2017 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு நான் என்ன செய்ய வேண்டும் என டோனியிடம் கேட்டேன், திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் சென்னை அணிக்கு தெரிவு செய்யப்படுவீர்கள் என்று வாக்குறுதி அளித்தார்.

சென்னை அணிக்காக என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது, சென்னை நிலைமைகளிலும், சென்னையில் விளையாடியதும், என்னால் எங்கும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது என்று சாஹர் கூறினார்.

இன்னும் வங்கதேச அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு ஒரு மாதமே உள்ளது. எனது துடுப்பாட்டத்தில் நான் கடுமையாக பயிற்சிபெற்றுள்ளேன், நான் ஒரு துடுப்பாட்டகாரர் என்று நிரூபிக்க வேண்டும் என்று சாஹர் தெரிவித்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...