'டோனி தலைமையிலான சென்னை அணியை எனக்கு சுத்தமாக பிடிக்காது'- ஸ்ரீசாந்த் பளீச்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

தடை நீக்கம் பெற்று விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தனக்கு சென்னை அணியை பிடிக்காது என கூறியுள்ளார்.

இந்திய அணியில் நட்சத்திர வீரராக வலம்வந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013ம் ஆண்டு ராஜஸ்தான் அணி சார்பில் விளையாடிய போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவருக்கு தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஸ்ரீசாந்தின் இடைநீக்கம் திருத்தப்பட்டு 7 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும் என்றும், அவர் அடுத்த ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடலாம் என்றும் கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி ஜெயின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஸ்ரீசாந்த், நான் சென்னை அணியை எந்த அளவிற்கு வெறுக்கிறேன் என்பது அனைவருக்குமே தெரியும். அதைப்பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.

அதற்கு காரணம் எம்.எஸ். தோனி அல்லது என் சீனிவாசன் அல்லது வேறு எதையாவது மக்கள் கூறுவார்கள். ஆனால் அது உண்மை இல்லை; நான் மஞ்சள் நிறத்தை வெறுக்கிறேன். அதே காரணத்திற்காக நான் அவுஸ்திரேலியாவை வெறுத்தேன்.

மிக முக்கியமாக நான் சென்னை அணிக்கு எதிராக நன்றாக விளையாடியிருக்கிறேன். அதற்காகவே நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன் எனக்கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்