விராட் கோலி மீது வெறித்தனமான அன்பை காட்டிய ரசிகர்

Report Print Kavitha in ஏனைய விளையாட்டுக்கள்

நேற்று இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இதன் போது தேனீர் இடைவேளைக்குப் பிறகு முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெறித்தனமாக ரசிகரை ஒருவரை சந்தித்துள்ளார்.

அந்த ரசிகர் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் அணியும் ஜெர்சியை உடல் முழுவதும் பச்சைக் குத்தி தனது அன்பினை வெளிக்காட்டியுள்ளார்.

இதனை கண்டு வியந்த விராட் தனது மீது வெறித்தனமாக அன்பு வைத்திருக்கும் அந்த ரசிகரை நேரில் அழைத்து வாழ்த்தியதுடன், கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இந்த காட்சி பார்ப்பவர்கள் பெரிதும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Image Credit: PTI
Image Credit: PTI

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்