இவரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான் தான்.. இந்திய வீரரை தைரியமாக வம்புக்கு இழுத்த பாகிஸ்தான் வீரர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ள கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததே நான் தான் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் கூறியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய இர்பான், நான் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது, அவர்கள் எனக்கு எதிராக சிறப்பாக துடுப்பாடவில்லை.

2012 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரின் போது, எனது உயரம் காரணமாக அவர்களால் என் பந்தை சரியாகப் பார்க்க முடியவில்லை, மேலும் எனது வேகத்தையும் யூகிக்கமுடியவில்லை என என்னிடம் சில இந்திய வீரர்கள் சொன்னார்கள்.

கம்பீர் போட்டியில் என்னை எதிர்கொள்ள விரும்பவில்லை, இரு அணிகளும் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் என் கண்ணை நேருக்கு நேர் பார்க்க தவிர்ப்பதை நான் எப்போதும் உணர்ந்தேன்.

2012 ஒரு நாள் போட்டி தொடரில் நான் அவரை நான்கு முறை வெளியேற்றினேன், அவர் எனக்கு எதிராகத் பதட்டம் அடைந்தார் என்று இர்பான் கூறினார்.

என்னை பார்த்து யாரும் பயப்படவில்லை, ஆனால், வெளியே சென்றபோது, கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததற்காக மக்கள் என்னை வாழ்த்தினர் என கூறினார்.

2012-2013-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடிய பின், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய கம்பீர், அதன் பிறகு இந்திய ஒரு நாள் அணியில் மீண்டும் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்