பிறந்தநாளன்று மூத்த வீரரை அசிங்கப்படுத்திய ஹர்திக் பாண்டியா... தக்க சன்மானம் கொடுத்த ரசிகர்கள்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாகீர் கான் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் ஹர்திக் பாண்டியா போட்ட ட்விட் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7ம் திகதி பிறந்நாளை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தார் ஜாகீர் கான்.

இளம் இந்திய வீர்ர ஹர்திக் பாண்டியாவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோவுடன் பதிவிட்டார். அதில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாகீர்... நான் செய்தது போலவே நீங்கள் அடித்து நொறுக்குவீர்கள் என நான் நம்புகிறேன் என ஜாகீர் கான் பந்தில் அவர் சிக்ஸர் அடிக்கும் வீடியோவை பதிவிட்டார்.

எனினும், பாண்டியாவின் பதிவு ஜாகீர் கானை அவமதிப்பதாக கருதிய ரசிகர்கள், ட்விட்டரில் பாண்டியாவை கடுமைாய விமர்சித்தனர்.

பாண்டியா நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடலாம், ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்ல வீரராக இருக்க தவறிவிடுகிறீர்கள் மற்ற வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். சாதாரண வாழ்க்கையை வாழ நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என ட்விட்டர் வாசி ஒருவர் பதிவிட்டார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers