பாஜக-வில் இணைகிறாரா கங்குலி... மௌனம் கலைத்த முன்னாள் இந்திய அணித்தலைவர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
116Shares

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ள இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி பாஜக-வில் இணையவுள்ளதாக பரவிய வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் கங்குலியும், மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷாவும் சந்தித்தனர். இச்சந்திப்பை அடுத்து கங்குலி பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து விளக்கமளித்த கங்குலி, இச்சந்திப்பின் போது பிசிசிஐ, குறித்தோ அல்லது பதவி குறித்தோ எதுவும் பேசவில்லை. அதேபோல், நீங்கள் இதை ஒப்புக் கொண்டால் தான் இது கிடைக்கும் என்ற விவாதமும் நடக்கவில்லை. அரசியல் குறித்த எந்த பேச்சுகளும் நாங்கள் பேசவில்லை.

அமித் ஷாவுடனான சந்திப்பு சிறப்பானது மற்றும் வித்தியாசமானது என கங்குலி குறிப்பிட்டார். அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இது அரசியில் தொடர்பான சந்திப்பு இல்லை என்று மறுத்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்