இந்திய அணி வீரர் விஜய் சங்கர் வெளியிட்ட புகைப்படத்தை விமர்சித்தும், கிண்டலடித்தும் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் விஜய சங்கர் டுவிட்டரில் தான் சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தையும், சட்டையில்லாமல் உடலை காட்டும் புகைப்படத்தை வெளியிட்டார்.
அதாவது முதலில் குண்டாக இருந்து பின்னர், கட்டுடலாக ஆனதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் சட்டையை போட்டு கொண்டு இருக்கும் அதே புகைப்படத்தை தான் உடலை காட்டி இன்னொரு புகைப்படமாக எடுத்து வெளியிட்டதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
The sweat, the time, the devotion.
— Vijay Shankar (@vijayshankar260) October 15, 2019
It pays off! #TransformationTuesday pic.twitter.com/oSyNWvMmVJ
முகத்தில் மீசை தாடி மற்றும் சட்டை இல்லாமல் உள்ளதும் தான் இரு புகைப்படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு ரசிகரின் பதிவில், சட்டையை கழட்டிவிட்டு புகைப்படத்தை வெளியிடுவதற்கு இவ்வளவு மெனக்கெட்டீர்களா என கேட்டுள்ளார்.
இப்படி பலரும் விமர்சித்த போதும், அவரின் கட்டுடல் நன்றாக இருப்பதாகவும் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்