டோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்.. முற்றுப்புள்ளி வைத்த பயிற்சியாளர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
307Shares

இந்திய நட்சத்திரம் டோனி ஓய்வு குறித்த வதந்திகளும், விவாதங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டோனியின் குழந்தை பருவ பயிற்சியாளர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியை அடுத்த தற்போது வரை டோனி ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.

ஓய்வில் சென்றுள்ள எப்போது அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். அவர் ஓய்வு பெறவுள்ளதாக வதந்திகள் ஒரு புறம் பரவ, முன்னாள் வீரர்கள் டோனி குறித்த அவர்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

எனினும், தற்போது வரை டோனி தரப்பில் இருந்து எந்த அதிகாரிப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் டோனியின் குழந்தை பருவ பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறியதாவது, 2004 முதல் தொடர்ந்து விளையாடி வரும் டோனிக்கு கண்டிப்பாக இந்த ஓய்வு தேவையானது. அவர் குடும்பத்துடன் சில நேரங்களை செலவிட வேண்டும்.

அவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என நான் நினைக்கிறேன். அதற்கு பின்னர் தனது எதிர்காலம் குறித்து டோனி முடிவெடுப்பார்.

டோனி அணிக்கு திரும்புவதை விட, உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்குவதே முக்கியம்.

அவர்களது திறமையை நாம் வீணடிக்க கூடாது, வங்க தேச அணிக்கு எதிரான தொடரில் அவர்களது திறமையை வெளிக்கொண்டு வர நல்ல வாய்ப்பாக இருக்கும் என பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்