400 சிக்ஸர்கள்...! சர்வதேச கிரிக்கெட்டில் மற்றொரு மைல்கல்லை எட்ட உள்ள ஹிட் மேன்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

ஹிட் மேன் என்றழைக்கப்படும் இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் மற்றொரு மைல்கல்லை எட்ட உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடகவிருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இந்திய அணியை வழிநடத்தும் ரோகித், சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் சேர இன்னும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே அடிக்க வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில், ரோகித் 232 சிக்சர்களை அடித்துள்ளார், டெஸ்ட் போட்டிகளில் 51, டி 20 போட்டிகளில் இதுவரை 115 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

ரோகித் இப்போது 400 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சேர இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தேவை. இப்போது வரை, இரண்டு வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்டகாரர் ஷாஹித் அப்ரிடி 476 சிக்சர்களையும், மேற்கிந்திய தீவுகள் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் 534 சிக்சர்களையும் குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்