கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் கால்பந்து அணியில் சேர்ந்த நட்சத்திர வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
517Shares

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், கால்பந்து அணியில் இணைந்து விளையாடியுள்ளார்.

வங்கதேச அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன், ஊழல் அணுகுமுறைகளைப் பற்றிய தகவல்களை ஐசிசியிடம் தெரிவிக்காததால், இரண்டு வருட தடை(ஒரு வருடம் இடைநீக்கம்) பெற்றார்.

இந்தியாவிற்கு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியானதால், அவரால் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் ஓய்வில் இருக்கும் அவர், வங்கதேச ராணுவ மைதானத்தில் கொரிய எக்ஸ்பாட் அணிக்கு எதிரான போட்டியில் ஃபுட்டி ஹக்ஸ் என்கிற கால்பந்து அணியுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

இதில் ஃபுட்டி ஹக்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அந்த அணி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஷாகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அக்டோபர் 29, 2020 அன்று முடிவடைகிறது. இதனால் இது அக்டோபர் 18 ஆம் திகதி துவங்கும் டி 20 உலகக் கோப்பையில் அவரால் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்