கோத்தபயாவின் கீழ் இலங்கை இப்படி தான் இருக்கும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரிய நம்பிக்கை

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றிப்பெற்றுள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றிப்பெற்றுள்ள நிலையில் வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்ய ட்விட்டரில் பதிவிட்டதாவது, ஜனாதிபதி கோத்தபயாவுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இலங்கை செழிப்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாட்டு மக்கள் கூறிவிட்டனர், இப்போது நல்ல ஆட்சியை வழங்குவதற்கான உங்களுக்கான நேரம் இது. நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரிய, 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது நினைவுக் கூரதக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்